< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது
|23 Jun 2023 3:59 PM IST
தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். அதன்படி, 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி வழங்கும் சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில், தமிழில் ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் உயரிய விருதான பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த உதயசங்கர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.