< Back
மாநில செய்திகள்
சாகித்ய அகாடமி விருது;  எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் - டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

சாகித்ய அகாடமி விருது; எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் - டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
20 Dec 2023 5:56 PM IST

தமிழில் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சிறுகுடி மக்களின் வாழ்வியலை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தும் "'நீர்வழிப் படூஉம்'" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் எழுத்தாளர் தேவி பாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை, எளிய மனிதர்களுக்கு நிகழும் வறுமை, அவர்கள் படும் துயரங்களை கதைகளாகவும், நாவல்களாகவும் தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வரும் எழுத்தாளர் தேவி பாரதி அவர்கள் மேலும் பல படைப்புகளை உருவாக்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்