< Back
மாநில செய்திகள்
எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
மாநில செய்திகள்

எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

தினத்தந்தி
|
11 March 2024 6:31 PM IST

எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் இன்று(மார்ச். 11) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தக்ஷிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மமாங் தய் எழுதிய 'தி பிளாக் ஹில்'(THE BLACK HILL) என்ற நாவலை 'கருங்குன்றம்' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்த 24 மொழிபெயர்ப்பாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது வென்றவர்களுக்கு ரூ. 50,000 ரொக்கப்பணம் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்