திருச்சி
கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
|கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பிரதீப் குமார் ஒத்திகை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கருவிகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு, ஒத்திகைைய பார்வையிட்டார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான சிறப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை காட்சிப்படுத்தி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும், தீயணைப்பு வீரர்கள் மூலம் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்வது என்பது குறித்த செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரண்யா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் அனுசுயா, உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், நிலைய உதவி மாவட்ட அலுவலர் சத்தியவர்த்தனன் உள்பட பணியாளர்கள் மற்றும் தீ தடுப்பு குழுவினர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.