மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
|பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை,
மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
"* மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.
* அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும்.
* ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
* அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
* பேருந்து சாலை சந்திப்பு, கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது இறங்க முயற்சிக்கும் பயணிகளுக்கு நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
* பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்க தயார்ப்படுத்த வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.