ராமநாதபுரம்
ராமேசுவரம் கோவிலுக்கு தரையை வணங்கி யாத்திரை வந்த சாதுக்கள்
|உத்ரகாண்ட் மாநிலத்தில் இருந்து ராமேசுவரம் வரை 4,000 கிலோ மீட்டர் தூரம் தரையில் விழுந்து கும்பிட்டபடி சாதுக்கள் யாத்திரை வந்தனர்.
ராமேசுவரம்,
உத்ரகாண்ட் மாநிலத்தில் இருந்து ராமேசுவரம் வரை 4,000 கிலோ மீட்டர் தூரம் தரையில் விழுந்து கும்பிட்டபடி சாதுக்கள் யாத்திரை வந்தனர்.
வடமாநில சாதுக்கள்
உத்ரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து தாமோதரதாஸ், மோசல்தாஸ் மோனி பாபா ஆகிய 3 சாதுக்களும் சாலை ஓரத்தில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கும்பிட்டபடி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.. இது குறித்து தாமோதரதாஸ் கூறியதாவது:-
உலக நன்மை மற்றும் உலக அமைதிக்காகவும் நாடு செழிப்பாக இருக்கவும் வலியுறுத்தி உத்ரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கும்பிட்டபடி ராமேசுவரத்திற்கு புனித யாத்திரை பயணம் தொடங்கினோம். பல மாநிலங்கள் உள்ள கோவில்களுக்கு சென்று விட்டு தற்போது ராமேசுவரம் வந்துள்ளோம்.
4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்
சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தரையில் விழுந்து கும்பிட்டபடி வந்துள்ளோம். ஒரு நாளைக்கு 10 கிலோ மீட்டர் யாத்திரை செய்துள்ளோம். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வாகனம் மூலம் உத்ரகாண்ட் செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தரையில் விழுந்து கும்பிட்டபடி வட மாநில சாதுக்கள் யாத்திரை வந்ததை வழி நெடுகிலும் உள்ள பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.