< Back
மாநில செய்திகள்
காமராஜர் சிலைக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மரியாதை
தென்காசி
மாநில செய்திகள்

காமராஜர் சிலைக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மரியாதை

தினத்தந்தி
|
16 July 2023 12:30 AM IST

வாசுதேவநல்லூரில் காமராஜர் சிலைக்கு சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் ம.தி.மு.க. சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கீழ பஜாரில் உள்ள காமராஜர் முழு உருவ வெண்கல சிலைக்கு டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கு.தவமணி, வாசுதேவநல்லூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்