தர்மபுரி
தர்மபுரி சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
|தர்மபுரி சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தைக்கு விற்பனைக்காக விவசாயிகள் அதிகளவில் பூக்களை கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் பூக்களை வாங்க ஆள் இல்லாமல் விலை குறைந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை நாளில் பூக்களின் தேவை அதிகரிக்கும், அதனால் பூக்களின் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பூக்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.260-க்கு விற்ற சாமந்திப்பூ ரூ.120-க்கும், ரூ.200-க்கு விற்ற சம்பங்கி ரூ.70-க்கும், ரூ.150-க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.120-க்கும். ரூ.600-க்கு விற்ற குண்டுமல்லி ரூ.300-க்கும் விற்பனையானது. சன்னமல்லி 440 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கும், செண்டுமல்லி கிலோ 20 ரூபாய்க்கும், கோழி கொண்டை 40 ரூபாய்க்கும், அரளி 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்தனர். தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.