< Back
மாநில செய்திகள்
வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டி கோவிலில் யாகம்
கரூர்
மாநில செய்திகள்

வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டி கோவிலில் யாகம்

தினத்தந்தி
|
19 Jun 2022 11:21 PM IST

வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டி கோவிலில் யாகம் நடந்தது.

கரூர் காமராஜ் மார்க்கெட் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கடைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதையடுத்து வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முயற்சியால் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.6 கோடியே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமிபூஜையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அங்குள்ள பழைய கடைகள் இடிக்கும் பணி தொடங்கியது.இதனால் அங்கு செயல்பட்டு வந்த மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகின்றன. இதையடுத்து மாற்றப்படும் இடத்தில் வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டி கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள தங்க விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தை கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கத்தலைவர் வழக்கறிஞர் ராஜூ, கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் கோல்ட்ஸ்பாட் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்