< Back
மாநில செய்திகள்
முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பண நிகழ்ச்சி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பண நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 Aug 2023 6:45 PM GMT

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பண நிகழ்ச்சி குழித்துறையில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

குழித்துறை,

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பண நிகழ்ச்சி குழித்துறையில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

98-வது பொருட்காட்சி

குழித்துறை நகராட்சி சார்பில் 98-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள், விவசாய விளைபொருள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அவற்றை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து வருகிறார்கள்.

பலி தர்ப்பண நிகழ்ச்சி

இந்த வாவுபலி பொருட்காட்சியின் முக்கிய அம்சமாக ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பண நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமானோர் பங்கேற்று ஆற்றங்கரையில் வாழை இலையில் பச்சரிசி உள்ளிட்ட தர்ப்பண பொருட்களை வைத்து புரோகிதர்கள் மூலம் பூஜை நடத்திய பிறகு ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை குழித்துறை நகராட்சி, மகாதேவர் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

மேலும் செய்திகள்