< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அம்மன் கோவிலில் யாகம்
|26 Jun 2023 1:10 AM IST
அம்மன் கோவிலில் யாகம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி பச்சையாபுரம் அழகுபார்வதி அம்மன் கோவிலில் வருஷாபிசேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களான செல்வ கணபதி, நாகராஜன், நாகம்மாள், கருப்பசாமி, சாஸ்தா, சுடலைமாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் விமான கலசத்துக்கும் அபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருநீறு உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.