< Back
மாநில செய்திகள்
சபரிமலை சீசன்: கோவை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
மாநில செய்திகள்

சபரிமலை சீசன்: கோவை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
3 Dec 2023 7:47 AM IST

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்றனர்.

கோவை,

சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக தெலுங்கானாவில் இருந்து கொல்லத்திற்கும், ஆந்திராவில் இருந்து கோட்டயத்திற்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில் (எண் 07131) மறுநாள் இரவு கொல்லம் ரெயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில், செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரெயில் (எண் 07132) மறுநாள் காலை 9 மணிக்கு செகந்திரபாத் சென்றடையும்.

இந்த ரெயிலானது மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, தாடிபத்ரி, கூட்டி, ஸ்ரீராம் நகர், கச்சிகுடா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதைபோல வருகிற 10, 17, 24, 31 ஆகிய தேதிகள் மற்றும் ஜனவரி மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம் நரசப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 07135) மறுநாள் மாலை 4.50 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக வருகிற 11, 18, 25 ஆகிய தேதிகள் மற்றும் ஜனவரி மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 07136) மறுநாள் இரவு 9 மணிக்கு நரசப்பூர் ரெயில் நிலையத்தை அடையும். இந்த ரெயில் எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சைராலா, பாப்ட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, பீமாவரம் டவுன் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்