< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்
|20 March 2023 11:39 PM IST
தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.
தக்கலை:
திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் அல்போன்சாள் (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது உறவினரை பார்க்க வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக நெய்யூர் அருகே ஆலங்கோட்டில் இருந்து குலசேகரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் சென்றபோது அல்போன்சாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியில் சத்தம் போட்டார். இதையடுத்து அங்கேயே பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பஸ்சில் சந்தேகபடும் வகையில் யாருமில்லை. பின்னர், இதுபற்றி அல்போன்சாள் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓடும் பஸ்சில் ெபண்ணிடம் நகையை அபேஸ் செய்த ஆசாமி தேடிவருகிறார்கள்.
---