< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீப மலை மீது ட்ரோன் கேமரா பறக்கவிட்ட ரஷ்ய இளைஞர்...! வனத்துறையினர் விசாரணை
|4 Jan 2023 1:27 PM IST
திருவண்ணாமலை தீப மலை மீது ட்ரோன் கேமரா பறக்க விட்ட ரஷ்ய இளைஞரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது உரிய அனுமதியின்றி ட்ரோன் கேமராவை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பறக்கவிட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, எந்த அனுமதியும் இன்றி தீப மலை மீது ட்ரோன் கேமரா பறக்கவிட்டது தெரியவந்து. அதனை அடுத்து வனத்துறையினர் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.