< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
தியாகதுருகத்தில்ஊராக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
|14 Sept 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில் ஊராக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தியாகதுருகம்,
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையான பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும், கணினி உதவியாளருக்கு பணி வரன்முறை படுத்த வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று தியாகதுருகம் ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.த இதனிடையே அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.