< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அரசு விழாக்களில் கிராமிய கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்
|12 Sept 2023 12:41 AM IST
அரசு விழாக்களில் கிராமிய கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட நலிந்த கிராமிய கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், அரசு விழாக்களில் கிராமிய கலைஞர்களுக்கு பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும். நலிந்த கிராமிய கலைஞர் நல சங்கத்திற்கு எரிச்சநத்தம் கிராமத்தில் அலுவலக கட்டிடத்திற்கு இடம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசின் புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர் பால்பாண்டி, மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் புதிரை வண்ணார் சமுதாயத்தினர் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆண்டு வருமான சான்றிதழ் ரூ. 72 ஆயிரத்துக்கு உட்பட்டிருக்கும் வகையில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.