< Back
மாநில செய்திகள்
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி- டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி- டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்

தினத்தந்தி
|
26 Jun 2022 8:23 AM IST

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு தகவல் பரப்பிய ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார் அளித்துள்ளது.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்றார். அவருடைய காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே அவருடைய உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. சில 'யூ-டியூப்' சேனல்களிலும் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. துணை பொதுசெயலாளர் பார்த்தசாரதி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு தகவல் பரப்பிய 'யூ-டியூப்' சேனல்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்