< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்
|12 Aug 2023 4:32 AM IST
நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
இட்டமொழி:
நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது காங்கிரஸ் வட்டார தலைவர்கள் நளன், கணேசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு உள்பட பலர் உடன் இருந்தனர்.