< Back
மாநில செய்திகள்
திருவட்டார் அருகேரப்பர் ஷீட் திருடியவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

திருவட்டார் அருகேரப்பர் ஷீட் திருடியவர் கைது

தினத்தந்தி
|
17 Jan 2023 12:53 AM IST

திருவட்டார் அருகேரப்பர் ஷீட் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள குப்பத்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 61). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் ரப்பர் ஷீட்டுகளை உலர வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் உலர போட்டிருந்த ரப்பர் ஷீட்டுகளில் பத்து ரப்பர் ஷீட்டுகள் மாயமாகி இருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜப்பன் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரப்பர் ஷீட்டுகளை திருடியது அம்பாங்காலை பகுதியை ேசர்ந்த பாலஸ் (56) என்பது தெரிந்தது. இதையடுத்து பாலசை போலீசார் கைது செய்து திருட்டு போன ரப்பர் ஷீட்டுகளை மீட்டனர்.

மேலும் செய்திகள்