கன்னியாகுமரி
திருவட்டார் அருகேரப்பர் பால் வெட்டும் தொழிலாளி தற்கொலை
|திருவட்டார் அருகே ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள பனங்காலவிளை மலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஜெயக்குமார் (வயது42), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு கவிதா(40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜெஸ்டின் ஜெயகுமாரின் தந்தை சற்குணம். கடந்த சில மாதங்களாக சற்குணம் பக்கவாத நோயால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஜெஸ்டின் ஜெயகுமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கவிதா குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றிருந்தார். சிறிது நேரத்தில் கவிதா வீட்டு திரும்பி வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் ஜெஸ்டின் ஜெயகுமார் தூக்கில் பிணமாக ெதாங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். பின்னர், இதுபற்றி கவிதா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் விரைந்து சென்று ஜெஸ்டின் ஜெயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.