< Back
மாநில செய்திகள்
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் ஆர்.டி.ஓ. ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் ஆர்.டி.ஓ. ஆய்வு

தினத்தந்தி
|
27 Aug 2022 10:04 PM IST

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்

தமிழக எல்லை பகுதியான குமுளியில் தேக்கடி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் சென்று வருகின்றனர். மேலும் கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு இந்த பாதை வழியாகவே ஜீப்களில் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை மிகவும் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுளை கொண்டது. சில இடங்களில் சாலை குறுகலாகவும் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படும். மழைக்காலங்களில் சாலையோர மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையிலான அதிகாரிகள் இன்று லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் ஆய்வு நடத்தினர். அப்போது மலைப்பாதையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. கூறினார். ஆய்வில் கூடலூர் நகராட்சி ஆணையர் காஞ்சனா, தாசில்தார் அர்ச்சுணன் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்