< Back
மாநில செய்திகள்
சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை குறித்து விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஆர்.டி.ஐ. மூலம் மனு
மாநில செய்திகள்

சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை குறித்து விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஆர்.டி.ஐ. மூலம் மனு

தினத்தந்தி
|
3 Sept 2022 11:16 PM IST

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கவர்னர் ஆர்.என்.ரவி பதிலளிக்க கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மனு அனுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சனாதன தர்மம், அதன் தோற்றம், கொள்கை, இந்து தர்மத்தின் அர்த்தம் பெரியாரின் கொள்கைகள் உள்ளிட்ட 19 கேள்விகளுக்கு கவர்னர் ஆர்.என் ரவியிடம் விளக்கம் கேட்டு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழக கவர்னர் தொடர்ந்து பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து வரும் நிலையில், சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி அவர் இந்த மனுவை அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்