< Back
மாநில செய்திகள்
நகை வியாபாரியிடம் ரூ.62 லட்சம் பறிமுதல்
சேலம்
மாநில செய்திகள்

நகை வியாபாரியிடம் ரூ.62 லட்சம் பறிமுதல்

தினத்தந்தி
|
26 Feb 2023 8:19 PM IST

சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் பள்ளப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக பையுடன் மர்ம நபர் ஒருவர் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மெயின் ரோடு குமுலம்குட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 59) என்பது தெரியவந்தது. மேலும் அவரது பையை போலீசார் சோதனை செய்த போது அதில் ரூ.62 லட்சத்து 12 ஆயிரம் இருந்தது.

இதையடுத்து அவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பாலகிருஷ்ணன் நகை வியாபாரம் செய்தது தெரியவந்தது. மேலும் பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் ரூ.62 லட்சத்து 12 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்