காஞ்சிபுரம்
மாடம்பாக்கம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்
|மாடம்பாக்கம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிகை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 200 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கும்படி ஊராட்சி செயலாளருக்கு ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 12 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.6 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. அதற்கான ரசீதை கடை உரிமையாளரிடம் ஊராட்சி செயலாளர் மொய்தீன் வழங்கினார்.