< Back
மாநில செய்திகள்
ரூ.6 கோடியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரூ.6 கோடியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
1 Sept 2023 12:15 AM IST

கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வரை ரூ.6 கோடியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை

கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வரை ரூ.6 கோடியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

பூமிபூஜை நிகழ்ச்சி

அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பகிர்மான குழாய் பதிப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய நகராட்சிகளின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். தற்போது வைகை அணையிலிருந்து கிடைக்க பெறும் குடிநீர் உப்பு நீராகவும், கலங்கலாகவும் வருவதாக பொதுமக்களிடம் வந்த புகாரையடுத்து ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டங்குடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

குடிநீர் வினியோகம்

இப்பணிகள் 6 மாதத்திற்குள் முடிவடைந்து குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சுத்தமான குடிநீராக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும். அதேபோல கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை புதியதாக பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக ரூ.444 கோடி மதிப்பில் புதியதாக சீவலப்பேரியில் இருந்து குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. செப்டம்பர் மாதத்தில் இங்கிருந்து பம்ப் செய்யப்பட்டு அக்டோபர் மாதத்தில் குடிநீர் வந்து சேரும். அதற்கு பின்னால் 2 நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதற்காக அதிகாரிகளையும் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்தி வருகிறேன்.

பணிகள் நிறைவு பெறும் வரை நகர் மக்களுக்கு இரண்டு மாத காலத்திற்கு மட்டும் ஒருமுறை தாமிரபரணியும், மற்றொரு முறை வைகை குடிநீரும் சுழற்சி முறையில் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபுஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், நகர்மன்ற உறுப்பினர்கள் கோகுல், இளங்கோ, நாகநாதன், அப்துல்ரகுமான், அகமது யாசிர், டுவிங்கிளின் ஞானபிரபா, காந்திமதி, சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்