< Back
மாநில செய்திகள்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52 லட்சம் பணம் பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52 லட்சம் பணம் பறிமுதல்

தினத்தந்தி
|
8 Aug 2022 4:18 PM IST

எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைமேடை 4-ல் வந்தடைந்த சிற்கார் எக்ஸ்பிரசில் ஏறி சோதனையிட்டனர். அதில் சந்தேகிக்கும் படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு செய்ததில், அவற்றில் ரூ.51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்கப் பணம் உரிய ஆவணங்கள் இன்றி இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த வெங்கட சந்தீப்குமார் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்