கரூர்
ரூ.247½ கோடியில் வங்கி கடன் உதவி
|ரூ.247½ கோடியில் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 1,236 பயனாளிகளுக்கு ரூ.247 கோடியே 57 லட்சத்தில் தொழில் முனைவோருக்கான வங்கி கடன் உதவிகளை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து விதமான கடன் உதவிகள் அனைத்து மக்களுக்கும் திட்டத்தினுடைய பலன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்று உறுதியாக செயல்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு திட்டத்தினுடைய வழிமுறையும் நெறிப்படுத்தப்பட்டு உரிய காலத்திற்குள் அதற்கான செயல் திட்டம் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு வங்கிகளிலும் கூட்டுறவு வங்கியின் மூலம் கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 100 சதவீதம் சிறப்பு நிலையை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது, என்றார். இதில், மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், தாட்கோ மேலாளர் பாலமுருகன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.