< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் - தகுதியானவர்களின் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் - தகுதியானவர்களின் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
25 Jun 2022 12:36 AM IST

மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய உயர்கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க 25-ந்தேதி(இன்று) முதல் வரும் 30-ந்தேதிக்குள் சிறப்பு முகாம்களை நடத்த உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட 25-ந்தேதி (இன்று) முதல் வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்