< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை திட்டம் - கால அவகாசம் நீட்டிப்பு...!
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை திட்டம் - கால அவகாசம் நீட்டிப்பு...!

தினத்தந்தி
|
30 Jun 2022 3:54 PM IST

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து இருந்தது.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், வரும் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. www.penkalvi.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவகாரங்கள் பதிவேற்ற வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை திட்டம் தொடர்பான தகவல்களைக் கட்டணமில்லா 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்