< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் - நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணை
|27 July 2022 11:11 AM IST
புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் குறித்து நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரசைவாக்கம் நிதி நிறுவனம் மீது ரூ.9 கோடி மோசடி புகார் - நிர்வாக இயக்குனரிடம் போலீசார் விசாரணைசென்னை புரசைவாக்கம் தனவர்தன சாசுவத நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 74 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.9 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஈஸ்வரப்பனிடம் (வயது 56) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்க முடியும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.