< Back
மாநில செய்திகள்
வங்கி கூட்டமைப்புகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.8½ கோடி கடனுதவி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வங்கி கூட்டமைப்புகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.8½ கோடி கடனுதவி

தினத்தந்தி
|
9 Jun 2022 12:12 AM IST

வங்கி கூட்டமைப்புகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.8½ கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதபெருவிழாவினை முன்னிட்டு வங்கி கூட்டமைப்புகளின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். விழாவில் இந்தியன் வங்கி உள்ளிட்ட 8 வங்கிகளின் மூலம் மொத்தம் 148 பயனாளிகளுக்கு ரூ.8.64 கோடி மதிப்பிலான கடன் உதவி தொகைக்கான காசோலையினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து 2021-22-ம் நிதியாண்டில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு செயல்திறன் விருதுகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் செய்திகள்