< Back
மாநில செய்திகள்
போலீஸ்காரரின் மனைவிக்கு ரூ.70 லட்சம் விபத்து காப்பீடு நிதி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

போலீஸ்காரரின் மனைவிக்கு ரூ.70 லட்சம் விபத்து காப்பீடு நிதி

தினத்தந்தி
|
12 Sept 2023 12:53 AM IST

போலீஸ்காரரின் மனைவிக்கு ரூ.70 லட்சம் விபத்து காப்பீடு நிதி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரில் கடந்த மே மாதம் 3-ந் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் போலீஸ் நிலைய போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் காளை முட்டி இறந்தார். அவரது சம்பள கணக்கு எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்தது. இந்த நிலையில் விபத்து காப்பீடு நிதியாக வங்கி மூலம் ரூ.70 லட்சம் அவரது மனைவி சபரிக்கு வங்கி நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே வழங்கினார்.

மேலும் செய்திகள்