திருச்சி
தனியார் கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி; 6 பேர் மீது வழக்கு
|தனியார் கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை, ஜூலை.19-
திருச்சி கோட்டை மேரிஸ் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராணி லீனஸ் ஜோசப் (வயது 66). இவரிடம், அவரது மகனுக்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் கடந்த 2019-ம் ஆண்டு முதலில் ரூ.2 லட்சமும், அடுத்து ரூ.5 லட்சமும் வாங்கினராம். அதன் பின் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திரும்ப கேட்டதற்கு, அதனையும் கொடுக்கவில்லையாம். இது குறித்து ராணி லீனஸ் ஜோசப் திருச்சி ஜே.எம்.கோர்ட்டில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்த கோர்ட்டு கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் விசாரணை நடத்தி திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இசபெல்லா, ரெக்ஸ், சூர்யா, ஜெர்சி, சோபியா, மெர்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.