< Back
மாநில செய்திகள்
ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி ரூ.59 லட்சம் மோசடி - சென்னை பெண் கைது
மாநில செய்திகள்

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி ரூ.59 லட்சம் மோசடி - சென்னை பெண் கைது

தினத்தந்தி
|
2 July 2023 6:04 PM IST

சென்னையில், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பெயரைச் சொல்லி 59 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி 59 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த திலகவேணி என்பவர், அ.தி.மு.க கூட்டங்களுக்கு சென்று, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து, அதை வைத்துக்கொண்டு பலரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், தான் அ.தி.மு.க கவுன்சிலர் என்று நம்பவைத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல், 2020-ம் ஆண்டு வரை, வேலை வாங்கித்தருவதாகக்கூறி பலரிடம் 59 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து 15-க்கும் மேற்பட்ட நபர்கள் அளித்த புகாரின்பேரில், அடையாறு போலீசார் விசாரணை நடத்தி திலகவேணியை கைது செய்தனர்.

வேலைவாங்கித் தருவதாக மேலும் பலரிடம் திலகவேணி மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அதுகுறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்