< Back
மாநில செய்திகள்
குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.57,500 அபராதம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.57,500 அபராதம்

தினத்தந்தி
|
8 Jun 2023 12:15 AM IST

குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

குளச்சல்:

குளச்சலில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.57,500 அபராதம் விதித்தனர்.

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் குளச்சல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, மதுபோதையில் ஓட்டிய லாரி, கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட நான்கு வாகன ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகன ஓட்டுனர்கள் நேற்று இரணியல் மாஜிஸ்திரேட்டு் அமீருதீன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அதில் மது போதையில் செல்போன் பேசிக்கொண்டு லாரி ஓட்டிய நபருக்கு ரூ.20,500-ம், கார் ஓட்டிய நபருக்கு ரூ.17,000-ம், ஆட்டோ மற்றும் மோட்டாா் சைக்கிள் ஓட்டிய நபர்களுக்கு தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.57 ஆயிரத்து 500 அபராதமாக கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை தடுப்பதற்காக குளச்சல் போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் முதல் போதையில் வாகனம் ஓட்டியதாக சுமார் 100 வழக்குகள் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்