< Back
மாநில செய்திகள்
புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.5000.. தெற்கு ரயில்வே வெளிட்ட சூப்பர் அறிவிப்பு.!
மாநில செய்திகள்

புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.5000.. தெற்கு ரயில்வே வெளிட்ட சூப்பர் அறிவிப்பு.!

தினத்தந்தி
|
10 Jun 2023 8:59 AM IST

ரயில் நிலையங்களில் புதுமணத் தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

இந்திய ரயில்வேயின் வருவாய்த்துறை பிரிவின் சார்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

அந்த வகையில், வெட்டிங் சூட் அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, கட்டணம் நிர்ணயித்து தெற்கு ரயில்வே கடந்தாண்டு வெளியிட்டது.

அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதியர் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதலாக ஆயிரத்து 500 செலுத்தவேண்டும்.

மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3 ஆயிரம் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்