< Back
மாநில செய்திகள்
தங்க புதையல் இருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

தங்க புதையல் இருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
11 Oct 2023 7:53 PM GMT

துறையூர் அருகே தங்க புதையல் இருப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்க புதையல்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள பெத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 36). இவர் தன்னுடைய உறவினரான கலிங்கமுடையான் பட்டி தெற்கு கொட்டத்தை சேர்ந்த பிரதீப் (45) என்பவரிடம் தொழில் சம்பந்தமாக குறி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது செல்வராஜிடம், பிரதீப் தன்னிடம் தங்க புதையல் கிடைத்ததாகவும், விக்டோரியா ராணி காலத்து தங்க காசுகள் சுமார் 1 கிலோ இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதனை உனக்காக ரூ.5 லட்சத்துக்கு கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, செல்வராஜ் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி பிரதீப்பிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.

மோசடி

இதனைதொடர்ந்து பிரதீப் தான் வைத்திருந்த 1 கிலோ எடையுடைய தங்க காசுகளை செல்வராஜிடம் ஒரு பையில் போட்டு கொடுத்தார். இதனை பூஜை செய்து திறந்து பார்க்குமாறு அவர் கூறியுள்ளார். அதன்படி செல்வராஜ் பூஜை முடிந்து அந்த பையை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க காசுகள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இதில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த செல்வராஜ் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பிரதீப் பணத்தை கொடுக்காததால் துறையூர் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்