< Back
மாநில செய்திகள்
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

தினத்தந்தி
|
23 Aug 2022 10:30 PM IST

மூங்கில்துறைப்பட்டு அருகே முன்னாள் ராணுவவீரர் வீட்டில் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

மூங்கில்துறைப்பட்டு

முன்னாள் ராணுவ வீரர்

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடி பகுதியை சேர்ந்தவர் மரியஜோசப்(வயது 65). முன்னாள் ராணுவ வீரரான இவர் அவரது மனைவி சுசிலாமேரியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மரியஜோசப் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன்உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக பண்ருட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊருக்கு வந்த அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் கொள்ளை

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. 10 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தொியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்கள்

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவுசெய்து தடயங்களையும் சேகரித்தனர்.

மரியஜோசப் வீ்ட்டில் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து மேற்கண்ட நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இது குறித்து மரியஜோசப் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். முன்னாள் ராணுவவீரர் வீட்டில் புகுந்து ரூ.5 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்