< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
தனியார் கம்பெனியில் ரூ.5 கோடி மோசடி வழக்கு: ரூ.10 லட்சம்-65 பவுன் தங்க காசுகள் பறிமுதல்
|24 July 2023 3:32 PM IST
தனியார் கம்பெனியில் ரூ.5 கோடி மோசடி வழக்கில் ரூ.10 லட்சம் மற்றும் 65 பவுன் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிலிப்ஸ் தனியார் கம்பெனியில் ரூ.5 கோடி சுருட்டிய வழக்கில் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த அகஸ்டின் சிரில் என்பவரையும், அவரது நண்பர் ராபின்கிறிஸ்டோபர் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீடுகளில் முதலில் நடத்திய சோதனையில், 215 பவுன் தங்க நகைகள் ரூ.7.60 லட்சம், ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையின்போதும், 65 பவுன் எடையுள்ள 13 தங்க காசுகள் மற்றும் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.