கரூரில் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிப்பு
|மேலும், 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர்,
கரூரில் பட்டா நிலங்களில் 79 குவாரிகளும், அரசு புறம்போக்கு நிலத்தில் 3 குவாரிகள் என மொத்தம் 79 குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் முறைகேடாக இயங்கும் குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, குவாரிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் பல்வேறு அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இதில் சட்ட விதிமீறல் நடைபெறுகிறதா என்பது தொடர்பாக ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 12 குவாரிகள் சட்ட விதிமுறைகளை மீறி குவாரிகளில் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 12 குவாரிகளுக்கும் சுமார் 44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இது தொடர்பாக 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.