< Back
மாநில செய்திகள்
பைனான்சியரிடம் ரூ.41 லட்சம் மோசடி  தம்பதி மீது வழக்கு
விழுப்புரம்
மாநில செய்திகள்

பைனான்சியரிடம் ரூ.41 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு

தினத்தந்தி
|
7 Jun 2022 5:04 PM GMT

பைனான்சியரிடம் ரூ.41 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தான் பைனான்சியர் தொழில் நடத்தி வருகிறேன். எனது அலுவலகத்திற்கு அருகில் எங்கள் பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். அவர் தொழில் விஷயமாக வட்டிக்கு பணம் கேட்டார். அவரது பேச்சை நம்பி முதலில் ரூ.18 லட்சம் கொடுத்தேன். இதற்கு மாதம், மாதம் வட்டி செலுத்தி வந்த நிலையில், மேலும் அவரது மனைவி அலிமாபானுவுடன் வந்து கேட்டதால் இதுவரை மொத்தம் ரூ.41 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் இந்த பணத்தை எனக்கு திருப்பி கொடுக்காமல் இருவரும் ஏமாற்றி வருகின்றனர். அபுபக்கரிடம் கேட்டபோது என்னை திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு கூறியிருந்தார். இந்த புகார் மனுவை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அபுபக்கர், அலிமாபானு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்