< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
நகை வியாபாரத்தில் ரூ.40 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்குப்பதிவு
|20 Aug 2022 7:13 PM IST
நகை வியாபாரத்தில் ரூ.40 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கீழ ஆண்டாள் வீதி கறிக்கடை சந்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரிடம் திருச்சி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி சுஜாதா ஆகியோர் தங்க நகை தொழில் சேர்ந்து செய்யலாம் என்று கூறினர். இதனை நம்பிய செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.40 லட்சம் கொடுத்தார். அதன் பிறகு நகை தொழிலில் செந்தில்குமாருக்கு கொடுக்க வேண்டிய பணம் மற்றும் அதற்கான லாபத்தொகையும் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார் திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா விசாரணை நடத்தி சிவக்குமார், அவரது சுஜாதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
---