< Back
மாநில செய்திகள்
கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகைகள் எரிந்து சாம்பல்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகைகள் எரிந்து சாம்பல்

தினத்தந்தி
|
28 Jun 2023 10:24 PM IST

தண்டராம்பட்டு அருகே விவசாயியின் கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் ரொக்கம், 3 பவுன் நகைகள் எரிந்து சாம்பலானது.

தண்டராம்பட்டு,

கூரை வீட்டில் தீ

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த மோத்தக்கல் ஊராட்சியை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 38). விவசாயியான இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது. அங்கு ஞானவேல் விவசாயம் செய்து வருகிறார். ஞானவேல் மனைவி ஆனந்தி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் கரும் புகை எரிந்தது. அதனைப் பார்த்து ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள்ளாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாக கூரை வீடு முழுவதுமாக எரிந்து சேதமானது. இருப்பினும் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும்தீ வேகமாக பரவியதால் கூரை வீடு முழுவதுமாக எரிந்து சேதமானது. ஞானவேல் புதிதாக வீட்டுமனை வாங்குவதற்காக தெரிந்தவர்களிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தாராம்.

நகை, பணம் எரிந்து நாசம்

இந்த நிலையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் 3 பவுன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி எரிந்து முழுவதுமாக சேதமானது.

இது குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்