< Back
மாநில செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில்  ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
22 Oct 2023 1:04 AM IST

திருச்சி விமான நிலையத்தில் ரூ.37½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, சென்னையை பழனி என்ற பயணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது உடலில் 612 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்துஅதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.37 லட்சத்து 58 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்