< Back
மாநில செய்திகள்
திண்டிவனம் அருகே  கிரேன் ஆபரேட்டரிடம் ரூ.3½ லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனம் அருகே கிரேன் ஆபரேட்டரிடம் ரூ.3½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
20 May 2022 6:22 PM GMT

திண்டிவனம் அருகே கிரேன் ஆபரேட்டரிடம் ரூ.3½ லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்,

திண்டிவனம் தாலுகா கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32), கிரேன் ஆபரேட்டர். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜான்பால் என்ற பெயரில் லண்டனில் இருந்து பேசுவதாக கூறி வாட்ஸ்-அப் மூலமாக பழகியுள்ளார். அப்போது சக்திவேலின் பிறந்த நாள் பரிசாக அவருக்கு காலணிகள், சூக்கள், கைக்கடிகாரம், ஐபோன், தங்க சங்கிலி, டி-சர்ட், ஜீன்ஸ் பேண்ட், சட்டை, கேமரா மற்றும் வெளிநாட்டு கரன்சி 50 ஆயிரம் டாலர்ஸ் வைத்து அனுப்பியுள்ளதாக அந்த நபர் கூறினார். மேலும் சக்திவேலை சுனிதா என்பவர் தொடர்பு கொண்டு, தான் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி உங்களுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதனை பெற பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய சக்திவேல், அந்த பெண் கூறிய தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கிகளின் கணக்கிற்கு 10.2.2022 முதல் 9.5.2022 வரையிலான தேதிகளில் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 500-ஐ தனது கூட்டேரிப்பட்டில் உள்ள வங்கி கிளை மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்தவித பரிசு பொருளையும் அனுப்பி வைக்காமல் அந்த நபர், பணத்தை ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சக்திவேல், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்