திருச்சி
(செய்திசிதறல்) டீத்தூள் வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி
|டீத்தூள் வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
டீத்தூள் வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
டீத்தூள் வியாபாரி
திருச்சி தென்னூரை சேர்ந்தவர் ஜமீல்முகமது (வயது 45). இவர் டீத்தூள் விற்பனை செய்து வருகிறார். திருச்சி பாரதிதாசன் சாலையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் ரஞ்சித்குமார். இவர் ஜமீல்முகமதுவை செல்போனில் தொடர்பு கொண்டு பிளாட் விற்பனை செய்து வருவதாகவும், இந்த தொழிலில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என கூறி உள்ளார். இதனை நம்பி கடந்த ஆண்டு ஜமீல்முகமது ரூ.51 லட்சத்தை ரஞ்சித்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு பிறகு ரூ.21 லட்சத்து 60 ஆயிரத்தை ரஞ்சித்குமார் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி ஜமீல்முகமது ரஞ்சித்குமாரை சந்தித்து மீதி தொகையை கேட்டார். அப்போது அவருக்கு ரஞ்சித்குமார் மிரட்டல் விடுத்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் ரஞ்சித்குமார் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூதாட்டியிடம் மோசடி
*திருச்சி உய்யகொண்டான்திருமலை சண்முகாநகரை சேர்ந்தவர் பாத்திமா ரோசாலி ராஜீ (72). இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம், வயலூர்ரோடு குமரன்நகரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மளிகை கடையை விரிவாக்கம் செய்ய ரூ.12 லட்சம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை. இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்தை ஜெய்சங்கர் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள தொகையை கடந்த மாதம் 27-ந் தேதிக்குள் கொடுத்துவிடுவதாக கூறி இருந்தார். ஆனாலும் பணத்தை திருப்பி தராததால் பாத்திமா ரோசாலி ராஜீ அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
*துறையூரi சேர்ந்தவர் சக்தி (38). இவர் மாம்பழச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை யாரோ திருடி சென்று விட்டனர். இதேபோல் உய்யகொண்டான்திருமலையை சேர்ந்த அசோக்குமார் (27). வரகனேரி பகுதியில் நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை யரோ திருடி சென்றுவிட்டனர்.