< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு

தினத்தந்தி
|
21 Dec 2022 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை ஜே.ஜே.நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49). இவர் வடமருதூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மகன், மகள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். மதியம் கிருஷ்ணமூர்த்தி சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டின் உள்பக்க கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டை சுற்றி பார்த்தபோது திடீரென வீட்டின் உள்ளே இருந்து 2 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்