விழுப்புரம்
ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு
|திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
திண்டிவனம்
ஓய்வுபெற்ற மின் ஊழியர்
திண்டிவனம் நல்லதம்பி நகர் பகுதியை சேர்ந்தவர் கலிவரதன்(வயது 60). ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலரான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் கலிவரதன் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
நகை, பணம் திருட்டு
அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம்ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தொியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டில் புகுந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.