< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

தினத்தந்தி
|
10 March 2024 7:56 PM IST

பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமம் அருகே நீராவிக் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரது குழந்தைகள் சந்தியா (வயது 13), கிருஷ்ணவேணி (வயது 10) மற்றும் இசக்கிராஜா வயது 8) ஆகிய மூவரும் நேற்று 09.03.2024 மாலை தனது உறவினருடன் பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்