< Back
மாநில செய்திகள்
பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல் அமைச்சர் அறிவிப்பு
மாநில செய்திகள்

பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல் அமைச்சர் அறிவிப்பு

தினத்தந்தி
|
16 March 2023 12:45 PM IST

பென்னாகரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

தருமபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது.

இந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் வெடித்ததில் பட்டாசு குடோன் தரைமட்டமாகியுள்ளது. இதனால், இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என்பது குறித்து மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும், பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பகுதிக்கு மக்கள் செல்லவேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பென்னாகரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்